மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் பார்வையிட்டு, மாடு பிடி வீரர்களை உற்சாகப்படுத்தியதுடன், பரிசுப் பொருள்களையும் வழங்கினார்.
பின்னர், மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுவதற்காகவே டெல்லியில் இருந்து நான் வந்தேன். மிகுந்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியால் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்று கூறுவது சரியல்ல என்று கூறினார்.
தொடர்ந்து , தமிழ் மொழி, கலாச்சாரத்தை சீர்குலைக்க மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார். மேலும்,விவசாயிகளை அழிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது ஏன்று கூறிய அவர், மத்திய அரசுக்கு நண்பர்களாக உள்ள 4 பேருக்காக வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் ராகுல்காந்தி கூறினா.
விமான நிலையம் செல்லும் வழியில் தென்பலஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அந்த பகுதி மக்களுடன் அமர்ந்து பொங்கல் திருவிழா உணவை ருசித்து சாப்பிட்டார் ராகுல்காந்தி.