அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 மணிநேர விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அங்கு நடைபெற்ற தேர்தலில் ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் வெற்றியை உறுதி செய்வதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம், கடந்த, 6ம் தேதி நடைபெற்றது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள், ‘கேப்பிடோல்’ எனப்படும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வன்றையில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போது அமெரிக்க ராணுவம் மற்றும் போராட்டக்காரர்களிடையே நடைபெற்ற மோதலில், துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபடுவதற்கு குடியரசு கட்சியினரை தூண்டிவிட்ட டிரம்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் வைத்தனர். இதனைத்தொடர்ந்து, டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்க எடுத்துக் கொள்ளப்பட்டது. 2 மணிநேர விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் எம்.பி.,க்களும் ஆதரவு அளித்தனர். மொத்தம் 232 பேரில், 187 பேர் டிரம்ப்பிற்கு எதிராக ஓட்டளித்தனர்.
இருப்பினும் இந்த தீர்மானம சென்ட் சபை என்று அழைக்கப்படும் அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மேலவையில், நிறைவேற்றப்பட்டால்தான், அதிபர் பதவியில் இருந்து டிரம்ப்பை நீக்க முடியும். புதிய அதிபராக ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி பதவியேற்றப் பிறகுதான் மேலவை கூடும். அதனால், அதற்கு முன்பாக டிரம்ப்பை அதிகாரப்பூர்வமாக பதவி நீக்கம் செய்வதற்கான வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.