கொரோனோ தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணியை நாளை முதல் மிகத் தீவிரமாக மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதிப்பில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்றும் தனியார், அரசு கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தீவிரம் என்றும் தெரிவித்துள்ளார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்….
தமிழகத்தில் ஒரே நாளில் 6000த்தை நெருங்கி விட்டது, கொரோனா தொற்று பாதிப்பு..
தமிழகத்தில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 5989.. சிகிச்சை
சென்னையில் மட்டும் தொற்று எண்ணிக்கை 2000த்தை நெருங்கி விட்டது.
குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை இன்று மட்டும் 1,952 பேர்.
அரசு மருத்துவமனையில் 14 ; தனியார் மருத்துவமனையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 23
தமிழகத்தில் இதுவரை 2,04,31,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 84,546 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
இன்றைக்கு மட்டும் 3,652 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, தொற்றால் இன்று மட்டும் 2,337 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
மாவட்டம் வாரியாக கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் அடங்கிய பட்டியல் இதோ…