Mon. Nov 25th, 2024

தென்மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்கள் அதிகளவு பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த மூன்று மாவட்டங்களிலும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டுஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கி விடவும், பயிர் சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கவும் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோரை நியமித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.