Sun. Nov 24th, 2024

சசிகலா புஷ்பா… தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்துவிடாத அதிசயப் பிறவி… தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டத்தில் அடையாளமற்று இருந்தவரை, மேயராக்கி அழகுப் பார்த்தவுடன், இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கே எம்.பி.யாக்கி அனுப்பி வைத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பாடாய்படுத்திய அழகிய பெண்மணி அவர். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, 2018 மார்ச்சில் டெல்லியில் வசித்து வந்த வழக்கறிஞர் டாக்டர் பி.ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டதும், அதன் பிறகு கடந்தாண்டு சசிகலா புஷ்பா, பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டதும் தமிழக அரசியலில் புதிய வரலாறு..

அரசியல் வாழ்க்கையில் அதிரடி புரட்சிகளைச் செய்த இருவரும், தமிழக மீடியாக்களில் தங்கள் கரங்களை வலுவாக பதிக்க முயற்சித்து வருகிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமான தகவல்..சசிகலா புஷ்பாவுக்கு சென்னையில் உள்ள ஊடகவியலாளர்கள் பலருடன் நல்ல அறிமுகமும், ஆரோக்கியமான நட்பும் உண்டு. அதில் முக்கியமான தலை ஒருவர், சன் டிவியில் தனது ஊடகப் பயணத்தை தொடங்கி, புதிய தலைமுறை, தந்தி டி.வி., ஜெயா டிவி என ஊடகச் சுற்றுலா மேற்கொண்டவர். அவரை வடநாட்டு டி.வி. ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உட்கார வைத்து அழகுப் பார்க்க சசிகலா புஷ்பாவும், அவரது கணவர் ராமசாமியும், டெல்லியில் நகர்த்தும் காய்கள், அதகளமானவை. அந்த ஊடக நண்பருக்காக, ஊடக உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு பஞ்சாயத்து செய்வதை சசிகலா புஷ்பாவும், அவரது கணவர் டாக்டர் பி.ராமசாமியும் தொடர்ந்து பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருவதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

பின்னவருக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர்களுடன் நெருக்கமான நட்பு இருப்பதால், அவர்கள் மூலமாக வடநாட்டு ஊடக முதலாளிகளிடம், தங்களது ஊடக நண்பருக்காக வலுவாக பரிந்துரை செய்கிறார்களாம். நியூஸ் 18 டி.வி.யில் இருந்து செய்தி ஆசிரியர் குணசேகரன் உள்ளிட்ட ஒருசிலரை அகற்றுவதற்காக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய பா.ஜ.க. முகமூடி அணியாத மனிதர் மாரிதாஸை நடுநிலையாளர்கள் வசை பாடினார்கள். அதே வேலையைதான் மறைமுகமாக, சசிகலா புஷ்பாவும், அவரது கணவர் டாக்டர் பி.ராமசாமியும் செய்து வருகிறார்கள் என்பது தமிழக ஊடகத்துறைக்கு ஏற்பட்ட சாபக் கேடு என்கிறார்கள் டெல்லியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள். அதுவும் எப்படிபட்ட உத்தமனுக்கு அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள தெரியுமா? தான் பொறுப்பு ஏற்கும் ஊடகத்தளங்களுக்கு அடிமாட்டு சம்பளத்தில் தகுதியான ஊடகவியலாளர்களை நியமித்துவிட்டு, லட்சக்கணக்கான ரூபாயை மாதந்தோறும் சுருட்டிச் செல்லும் களவாணிக்குதான்.

ஊடகத்துறைக்கே தகுதியற்ற அந்த நபரை, ஆழமான ஊடக ஞானம் கொண்ட ஒருவர் ஒருமுறை சந்தித்து பேசியபோது, தான் சொன்னால் பெங்களுரில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்.காம் செய்தி நிறுவனத்தில் உங்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். இவரை நம்பி அந்த மூத்த ஊடகவியலாளரும் பெங்களூர் சென்று, அந்த நிறுவனத்தில் வேலை கேட்டிருக்கிறார். பரிந்துரை செய்த நபரை, காரி துப்பியிருக்கிறார்கள் அந்தநிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பார்கள். அப்படியொரு அவமானத்தை சந்தித்த அந்த ஆளுமை, இன்றைக்கு ஒரு ஊடகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று காமெடி செய்யும் கவுண்டமணி டைலாக்கிற்கு ஏற்ப, அந்த டூபாக்கூரை நம்பி, அப்பாவி இளைஞர்கள் பலர் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்ட மனிதாபிமானமற்ற அந்த டூபாக்கூருக்குதான் சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும் தங்களது செல்வாக்குக்கு மீறி உதவி செய்ய துடிக்கிறார்கள் என்று சொன்னால், தமிழக ஊடகத்துறையின் தரம் தாழ்ந்து எங்கே சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற கவலைதான் அதிகமாகிறது. அவர் மட்டுமல்ல, ஏற்கெனவே ஒன்றிரண்டு ஊடகங்களில் புகழ் வெளிச்சத்தில் ஆகச் சிறந்த ஆளுமைகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்களும், ஒரு டி.வி.யில் இருந்து இன்னொரு டி.வி.யின் தலைமைப் பீடத்திற்குச் செல்ல, ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ அல்லது தேசியக் கட்சிகளோ, அதில் பிரபலமாக இருக்கும் தலைவர்களை தங்களுடைய காட் ஃபாதராக ஏற்றுக்கொண்டும், அவர்கள் மூலம்தான் மறைமுக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் வெட்கக்கேடான ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள், அறநெறியோடு ஊடகத்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற மூத்த ஊடகவியலாளர்கள்….