Sun. Nov 24th, 2024

அ.தி.மு.க. அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று (ஜன.11) பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, அவரது தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு பற்றி அ.தி.மு.க. தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், மருத்துவர் ராமதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில், வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணிப் பற்றியே, தொகுதி பங்கீடுப் பற்றியோ எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையின் போது அவர் சில நிபந்தனைகளை முன்வைத்ததாக, அ.தி.மு.க. சார்பு ஊடகங்களில் பலவிதிமான கருத்துகள் பரப்பபட்டன.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும், சட்டமன்றத்தேர்தலின் போது பா.ம.க.வின் நிலை குறித்தும் வெளிப்படுத்தும் விதமாக, சமூக முன்னேற்றச் சங்க உறுப்பினர்களுக்கு பாமக நிறவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: 2021 தேர்தலில் 60 இடங்களில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் 60 இடங்களில் நாம் வெற்றி பெற்று விட்டால், அதன் பின்னர் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும் என்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாமகவுக்கு ஆதரவான களச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ், தனது மடலில் வலியுறுத்தியுள்ளார்.