Sun. Apr 20th, 2025

கர்நாடகாவின் உத்தர கர்நாடகாவில் உள்ள அங்கோலா பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத்நாயக் மற்றும் அவரது மனைவி விஜயா உள்ளிட்ட பலர் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த ஸ்ரீபத்நாயக், அவரது மனைவி விஜயா உள்ளிட்டோரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவரது மனைவி விஜயாவும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஸ்ரீபத்நாயக், மேல் சிகிச்சைக்காக கோவா கொண்டு செல்லப்பட்டார். மேலும் 3 பேருக்கு அங்கோலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருகிறது. விபத்திற்காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.