Sun. Apr 20th, 2025


புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன். இவர், சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் இவரது அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு, வங்கி பெட்டகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்க-வைர நகைகள், ரூ.37 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ரூ.7 கோடி அளவுக்கு 18 சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து பாண்டியன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று, திருமயத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.