Sun. Apr 20th, 2025

வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வுடன் பா.ம.க கூட்டணியை உறுதிப்படுததுவது தொடர்பாக தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்து அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தை யில் இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கூடிய பா.ம.க. செயற்குழுக் கூட்டத்தில், 20% தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதுதொடர்பான சாதக, பாதக அம்சங்கள், தனி ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடு வழங்குவதில் தமிழக அரசுக்கு உள்ள சிக்கல்கள் குறித்தும் இரண்டு அமைச்சர்கள் பா.ம.க. நிறுவனரிடம் விரிவாக எடுத்துரைப்பார்கள் என்றும் அ.தி.மு.க. தரப்பு தகவல் தெரிவிக்கிறது.