தி.மு.க. சர்பில் சென்னை ராயபுரத்தில் மக்கள் வார்டு சபைக் கூடம் நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ராயபுரம் தொகுதியின் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார், இந்த தொகுதியின் வளர்ச்சிக்கோ, வாக்களித்த மக்களுக்கோ ஒரு நன்மையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க.க்கு மாற்றிய பின்னரே அ.தி.மு.க. மாணவரணி நிர்வகை கைது செய்யப்பட்டதாக கூறிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.