Sun. Nov 24th, 2024

மாயமான விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் தலைநகர் ஜகார்த்தோவில் இருந்து 62 பேருடன் பறந்து உயர்ந்த இந்த விமானம் 4 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது.இந்த நிலையில் ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல்பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொறுங்கி விழுந்ததை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்துள்ளார். அதில் பயணம் செய்த 62 பேரின் நிலை என்ன என்பது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, விபத்து நேரிட்டதாக சந்தேகப்படும் கடல் பகுதியில் இருந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள், சிதைந்து போன மனித உடல்களின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 62 பேரும் உயிரோடு மீட்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.