Sun. Apr 20th, 2025

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் – குமரி கடல் பகுதிக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.