Sun. Apr 20th, 2025

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து பயணிகள் உள்பட 62 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமாகிவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம்,உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் பொன்டியநாக் நகர் நோக்கி புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் ஜகர்தா நகரையொட்டியுள்ள கடற்பகுதியில் விமானத்தின் சிதைத்த பாகங்கள கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் 62 பேரின் நிலை குறித்தும் முழுமையான விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. .