இந்தியாவில் கொரோனோ நோய் தொற்றுக்கான தடுப்பூசி இரண்டு வகையாக தயாராக இருக்கிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மருந்து தரக்கட்டுபாடு அமைப்பு கடந்த 2 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடதது, நாடுமுழுவதும் இரண்டு கட்டமாக தடுப்பூசி போடும் ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதால், வரும் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக முன்கள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், 50 வயதிற்குட்பட்ட நீரழிவு உள்ளிட்ட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த் தொற்று உள்ளவவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், இரண்டாம் கட்டத்தில் ஏறக்குறைய 27 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் 11ல் துவக்கம் :இதனிடையே, கர்நாடகாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் திட்டம் வரும் 11ம் தேதியே தொடங்கவுள்ளதாகவும், காணொலி வாயிலாக அந்தப் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.