இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் இதோ…
திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது.
குடும்பத்தலைவியருக்கு ரூ.1500, சிலிண்டர்கள் 6 என அறிவிக்கிறார்கள். பத்தாண்டுகளாக ஏன் தரவில்லை?
சிலிண்டர் விலையை ஏன் குறைக்கவில்லை?
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? குடும்பத்தலைவியரே கேட்பர்!
இதனிடையே, இன்று காலை தனியார் மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் கொரோனோ தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
கொரோனோ தடுப்பூசி குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளளார்.
முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.