திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருடன் வந்த அவரது மனைவி துர்கா, சமயபுரம் கோயிலுக்குச் சென்று மனமுருக அம்மனை வழிப்பட்டார். இதற்கு முன்பாக உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்று தேர்தல் பரப்புரைக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு முக.ஸ்டாலின் சென்றிருந்தபோது, அந்தந்த பகுதியில் உள்ள பிரபல கோயிலுக்குச் சென்று துர்கா ஸ்டாலின், சிறப்பு பூஜை நடத்தியதுடன் மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
டாக்டர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து வீரா மரைக்காயர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். ராமேஸ்வரத்தில் வசித்த அவர், 104 வயதை எட்டிய நிலையில், அவர் இன்று இரவு காலமானார். இவர் மீது அளவுற்ற அன்பு வைத்திருந்தார் டாக்டர் அப்துல் கலாம் மிகுந்த அன்பை வைத்திருந்தார்.
ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது :
சென்னையில் முதல் போட்டி நடைபெறும் என அறிவிப்பு.இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.மே 30ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனோ மீண்டும் தலையெடுப்பு : இ.பாஸ். கட்டாயம்…
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களின் வழியாக தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என்றும், பிற மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொருளாதார இடஒதுக்கீடு அமல்
அண்ணா பல்கலையில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுள்ளது.
எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பில் 10% இட ஒதுக்கீட்டின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில், 10 % இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது, சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.