Sun. Apr 20th, 2025

DGP ராஜேஷ் தாஸூக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கு நாள்தோறும் சூட்டைக் கிளப்பி வருகிறது… மாலை 6 மணியளவில் Adgp,IG,DIG அந்தஸ்திலான 12 ஐபிஎஸ் பெண் உயரதிகாரிகள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் JK திரிபாதி ஐபிஎஸ். ஸை அவரது அலுவலகத்தில் சந்தித்து,சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.. மேலும் பாலியல் தொந்தரவுக்கு உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும் 12 அதிகாரிகளும் புகாராக கூறியுள்ளனர்..பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு உச்ச கட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்…