Sun. Nov 24th, 2024

திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு…

தைப் பூசத் திருவிழாவையொட்டி புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா வெகுவாக களை கட்டும். இதில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் திரளாக கலந்துகொள்வார்கள். வழக்கப்படி, இந்த ஆண்டு் தைப்பூச திருவிழா வரும் 22- ஆம் தேதி தொடங்கி 31- ஆம் தேதி வரை நடைபெகிறது.

விழாவையொட்டி பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில்,
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே வருகிற 28-ந்தேதி நடைபெறும். அப்போது தேரோட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதியில்லை.

கொரோனா காலத்தில், திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக அரசு அறிவித்தபடி நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பழனி முருகன் கோவில் நிர்வாகத்தினர் பின்பற்ற வேண்டும்.

தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் 5 ஆயிரம் பேர் மலைக்கோவிலில் ஒரு இரவு தங்குவது வழக்கம். தற்போது 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை ஆட்சியர் தனது உத்தரவில் பிறப்பித்துள்ளார்.