டிரம்ப்பின் கண்ணாமூச்சி விளையாட்டு ஓய்ந்தது…
ஜோ பைடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதியானது…
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள், கடந்த 14 ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக தங்கள் வாக்குகளை பதிவு செய்து சீலிட்ட கவரில் அனுப்பி வைத்தனர். அந்த வாக்குகள், அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடல் கட்டிடத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. அப்போதுதான், தற்போதைய அதிபர் டிரம்ப், முரண்டுப்பிடித்தார். அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு கூடி வன்முறையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார். அவரின் வெற்றியை துணை அதிபர் மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றளித்தார். அதன்பின்னர், வேறு வழியின்றி அதிகார மாற்றத்திற்கு அதிபர் டிரம்பும் ஒப்புதல் அளித்தால், கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் டிரம்ப் ஆடி வந்த கண்ணாமூச்சி விளையாட்டுகளுக்கு முடிவு வந்தது. வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.