Sat. Nov 23rd, 2024

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்து, இன்று நான்காம் ஆண்டில் அந்த கட்சி அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால், கமல்ஹாசன் எதிர்பார்த்தபடி கூட்டம் கூடவில்லை. இருப்பினும், அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்ளாமல் கூட்டத்தில் கமல்ஹாசன், வழக்கம் போல சினிமா டைலாக் மாதிரி, அரசியல் கருத்துகளை மனப்பாடம் செய்து, அள்ளி வீசினார். அதைக் கேட்டும் அசரவில்லை, அவரது ரசிகர்கள்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். அதன விவரம் இதோ…..

நல்லவர்கள்  எங்களுடன் சேர வேண்டும். கதவுகள் திறந்தே இருக்கிறது. தமிழக மக்கள் நலனில்  அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம். நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் தேடி எடுத்துக்கொள்வோம். 
கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன. திமுகவில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினி வாய்ஸ் கொடுக்க நினைத்தால் அவர்தான் கொடுக்க வேண்டும். வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல. கூட்டணிக்கு தான் பேச்சுவார்த்தை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.