ஆரம்பிச்சிட்டாரய்யா… கமலும் ஆரம்பிச்சிட்டாரய்யா…
இலவசங்கள் மக்களை கோழையாக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வரும் நேரத்தில், நடிகர் கமல்ஹாசனும் திராவிட கட்சிகளின் பிரசார பாணியை தொடங்கிவிட்டார். அவருக்கு முன்பாக தேர்தல் களத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான், தொடக்கம் முதலே இலவசத் திட்டங்களுக்கு கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நேரத்தில் மாற்று அரசியலை முன்வைத்து களம் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கொரு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வேலூரில் கொட்டும் மழையில் திறந்த வேனில் நின்றபடி அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மக்கள் நீதி மையத்தை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அனைத்தரப்பினரும் தனது அரசியல் நடவடிக்கைகளை வியந்து பார்ப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.