Sat. Nov 23rd, 2024

அமைச்சர் உதயகுமார் பேட்டி.

புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த வருடத்திற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதனை இன்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். வாடிவாசல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார். அப்போது அவர், வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்றார்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.