திமுக சிறுபான்மை பிரிவு சாபில் சென்னை திருவான்மீயூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவரின் முழு உரை இதோ:
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் அடையார் ஷபீல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இஸ்லாமியப் பெருமக்களின் இனிய ரமலான் இப்தார் நிகழ்வில் நீதியரசர்கள். கல்வியாளர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலக பிரபலங்கள், வாரிய தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள், உலமா பெருமக்கள், மார்க்க அறிஞர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நோன்பு திறப்பு நிகழ்வை முன்னிட்டு நலிவுற்ற இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.