Thu. Nov 21st, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் சேப்பாக்கம் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினை உரிமையாளராக கொண்ட ரெட் ஜெயன்ட் மூவீஸ், தமிழ் திரையுலகில் மீண்டும் விறுவிறு வளர்ச்சியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடும் தமிழ்பட உரிமையை பெற்று வருவதுடன் திரைப்பட தயாரிப்பிலும் மீண்டும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ்.

தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தையும் திரையரங்குகளில் ரெட் ஜெயன்ட் மூவீஸ்தான் வெயியிடுகிறது. அதற்கான உரிமையை, அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸரிடம் இருந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் வரும் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வெளியிடப்படுகிறது.

தற்போது, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையையும் கைப்பற்றியுள்ளது, ரெட் ஜெயன்ட் மூவீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “விக்ரம்”. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது.

தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வசூலில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் விஜய், நடிகர் கமல் ஆகியோரின் திரைப்படங்களை வெளியிடும் உரிமைகளை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதையடுத்து, பாரம்பரியமாக திரைப்பட விநியோகத் துறையில் ஈடுபட்டு வரும் பிரபலங்கள், தங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளனர்.

“விக்ரம்” தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்)
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
சண்டை பயிற்சி – அன்பறிவு
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
வசனம் – ரத்ன குமார், லோகேஷ் கனகராஜ்,
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை – N.சதீஷ் குமார்
காஸ்டியூம் டிசைனர் – பல்லவி சிங், V.சாய், கவிதா.J
மேக்கப் – சசி குமார்
புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – M.செந்தில்
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – S.டிஸ்னி
பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா
சவுண்ட் டிசைன்ஸ் – SYNC Cinema
VFX – UNIFI Media, VFX Phantom, Real Works Studio
DI – IGENE
இணை இயக்குனர்கள் – மகேஷ் பாலசுப்ரமணியம், சந்தோஷ் கிருஷ்ணன், சத்யா, வெங்கி, விஷ்ணு இடவன், மெட்ராஸ் லோகி விக்னேஷ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)