Mon. Nov 25th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் சென்னை கிண்டியில் உள்ள மாளிகையில் ஆளுநர் என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவை காலதாமதப்படுத்தாமல் குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல், தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மரியாதை நிமித்தமாக ஆளுநருக்கு பொன்னாடை அணிவித்த முதல்வர், திராவிட மாடல் எனும் புத்தகத்தை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆளுநருடனான சந்திப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ…