உக்ரைனில் இருந்து 22 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
கடும் சவால்களுக்கு மத்தியில் மாணவர்களை தாயகம் அழைத்து வந்துள்ளோம்.
போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை மீட்பது சாத்தியமானது.
இந்தியர்கள் மட்டுமன்றி, பிற வெளிநாட்டினரையும் உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம்.
பெரும்பாலான மாணவர்கள் உக்ரைனிலேயே தங்கியிருக்க முடிவு செய்திருந்தனர்.
படிப்பை பாதியில் விட்டு தாயகம் திரும்ப மாணவர்கள் தயக்கம் காட்டினர்.
சவால்களை எதிர்கொண்டு, மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்துள்ளோம்.
உக்ரைனில் இறந்த நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணவர்களின் கல்வி தொடர்பாக, முழு பொறுப்புடன் அரசு அணுகும்.
இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.