Sat. Nov 23rd, 2024

சுப்பிரமணிய சுவாமி மாஸ்டர் பிளான்….

ஓ.பி.எஸ்,
முதல்வர்…..

டி.டி.வி. தினகரன்
அன்புமணி ராமதாஸ்
பிரேமலதா விஜயகாந்த்
நடிகர் சரத்குமார்
வானதி சீனிவாசன்

5 துணை முதல்வர்கள்

சசிகலா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர்.

நடிகர் கமலஹாசன்
ராஜ்ய சபா எம்.பி.

சுப்பிரமணிய சுவாமி மாஸ்டர் பிளான்…

அமித்ஷா ஆபரேஷன் ஸ்டார்ட்.

அரசுப் பணத்தை வாரி இரைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமியின் முதல் அமைச்சர் கனவுக்கும்,
அ.தி.மு.க. ஆட்சியின் எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க.வுக்குதான் என்ற நினைப்பில்
இப்போதே முதல்வராகிவிட்டதாக வலம் வரும் மு.க.ஸ்டாலினுக்கும்
ஒருசேர வேட்டு வைக்க, டாக்டர் சுப்பிரமணிய சுவாமி உருவாக்கியுள்ள மாஸ்டர் பிளானுக்கு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓ.கே. கொடுத்துவிட்டதாக டெல்லி தகவல்கள் ஷாக் கொடுக்கின்றது.

டெல்லி பா.ஜ.க. மேலிடத்தின் விருப்பத்திற்கு மாறாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் மூவர்
ரகசிய மீட்டிங் போட்டு, பா.ஜ.க.வையே எதிர்த்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என
எடுத்த முடிவு பற்றி மத்திய உளவுத்துறை மூலம் பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.
அதனால், ஆவேசம் அடைந்துவிட்டாராம் மோடி.
அரசியல் சாணக்கியரான அமித்ஷாவிடம் தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டாராம்.
தமிழக அரசுப் பணத்தில் பல்லாயிரம் கோடி ரூபாயை கமிஷனாக வைத்துள்ள மூவர் கூட்டணிக்கு
ஷாக் டீட்ரிமென்ட் கொடுங்கள் என்று கண்கள் சிவந்தாராம் பிரதமர் மோடி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பேக் அடித்துவிட்டதால்,
மோடியின் ஐடியாவுக்கு அமித்ஷாவும் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

ரஜினி விஷயம் ஊத்திக் கொண்டதால்
டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் மாஸ்டர் பிளானை கையில் எடுத்துவிட்டாராம் மோடி.
இந்த பாயிண்ட்டில்தான் டிவிஸ்ட்டே ஸ்டார்ட் ஆகிறதாம்.

சுவாமியின் மாஸ்டர் பிளான்… தமிழக அரசியலில் சூட்டை கிளப்பும் ரகமாக இருக்கிறதாம்.
இ.பி.எஸ்.ஸுக்கும், ஸ்டாலினுக்கும் ஒருசேர ஷாக் டிட்ரீட்மென்ட் கொடுக்கும் பிளான் தான் அதுவாம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வருபவர் சுப்பிரமணிய சுவாமி மட்டுமே.
அதற்கு காரணம், சசிகலா பெயரைச் சொன்னால்தான்,
அ.தி.மு.க.வில் ஆளாளுக்கு ஆட்டம் போடுபவர்கள் எல்லாம் அடங்குவார்கள் என்பதுதான்.

சசிகலாவை வைத்து சுவாமி ஆடும் கேம் என்ன தெரியுமா.
கடந்த நான்கு ஆண்டுகளில் இ.பி.எஸ் உள்பட கொங்கு அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை தொகுத்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டாராம் சு.சுவாமி.
அதைப் பார்த்து டெல்லி மேலிடம் அதிர்ந்துப் போனதால்தான், இ.பி.எஸ்.ஸுக்கு பதிலாக தாங்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என கோஷமிட தொடங்கி விட்டார்களாம்..

பொங்கலுக்குப் பிறகு இ.பி.எஸ்.ஸுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை சூடு பிடிக்குமாம்.
அதேபோல, மற்ற கொங்கு அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் உள்ள புகார்களை
மத்திய அரசு கையில் எடுத்து, ஒட்டுமொத்தமாக கொங்கு அமைச்சர்களுக்கு செக் வைக்குமாம்.

அதேநேரத்தில், மூவர் கூட்டணிக்கு தேர்தல் செலவுக்கு பணம் திரட்டி கொடுத்த குட்கா புகழ் அமைச்சருக்கு எதிரான
விசாரணையையும் தீவிரப்படுத்தும் திட்டமும் தயாராக இருக்கிறதாம்..

இப்படி, இ.பி.எஸ். டீமை கூண்டோடு காலி செய்துவிட்டு, மறைந்த செல்வி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்.ஸை கையில் எடுப்பதுதான் சுவாமியின் மாஸ்டர் பிளானாம்.

அதே நேரத்தில் சசிகலாவை சிறையில் இருந்து விடுதலை செய்து,
அவரை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக்கி
முதலமைச்சர் வேட்பாளராக ஓ.பி.எஸ்.ஸை அறிவித்து,
சசிகலா தலைமையிலான அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று அறிவிக்க சூப்பர் பிளானை ரெடி பண்ணி தந்திருக்கிறாராம் சுவாமி.

என்.டி.ஏ.வின் சி.எம். கேன்டிடேட் ஓ.பி.எஸ்., என்று அறிவித்த கையோடு,
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்,
பா.ம.க., தே.மு.தி.க., நடிகர் கமல்ஹாசன், நடிகர் சரத்குமார், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை
கூட்டணிக்கு இழுத்து மெகா கூட்டணியை உருவாக்குவதுதான் சுவாமியின் மாஸ்டர் பிளானாம்.

தி.மு.க ஓட்டு வங்கியை மேலும் பதம் பார்க்க மு.க.அழகிரி களம் இறக்கப்படுவாராம்..டெல்லி மேலிடத்தின் ஸ்கிரீன் பிளே படி தான் மதுரையில் பொங்கினாராம் மு.க.அழகிரி…

பா.ஜ.க தலைமையில் மெகா கூட்டணி அமைந்தால், யாரும் கூப்பிடாமலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாக முன்வந்து
என்.டி.ஏ. வெற்றிக்கு வாய்ஸ் கொடுப்பார் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறாராம் சுவாமி.

யார், யாருக்கு எவ்வளவு சீட் என்றெல்லாம்கூட பக்காவாக கணக்குப் போட்டு கொடுத்துள்ள சுவாமி,
இந்த தேர்தலில் திராவிட கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு,
பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க இதுதான் சரியான நேரம் என்றும் ஆரூடமும் சொல்லியிருக்கிறாராம்.

இந்த கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூட்டணி ஆட்சி அமைந்தால்,
டி.டி.வி.தினகரன்,
டாக்டர் அன்புமணி ராமதாஸ்,
பிரேமலதா விஜயகாந்த்,
நடிகர் சரத்குமார்
வானதி சீனிவாசன் ஆகிய ஐந்து பேருக்கும்
துணை முதலமைச்சர் பதவிகள் வழங்கலாம் என்றும் அட்வைஸ் செய்துள்ளாராம் சுவாமி.

இந்த கூட்டணியின் வெற்றிக்கு கமல்ஹாசனின் பிரசாரமும் பிளஸாக இருக்கும் என்பதால்,
அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை கிப்ட்டாக கொடுக்கலாம் என்பதும் சுவாமியின் ஐடியாவாம்.

டோட்டலாக, இப்போது மாற்றம் இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை என்ற டைலாக்கை
சுவாமி, மோடி, அமித்ஷா கூட்டணி, கையில் எடுத்துவிட்டதாம்.

பொங்கல் முடிந்தவுடனே தமிழக அரசியல் தேர்தல் களத்தில் வாண வேடிக்கை தூள் கிளப்பப் போகிறதாம்.

வெயிட் அன்ட் ஸி.