தமிழகம்
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் – மத்திய உள்துறை செயலாளர்
“மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?”
மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின், தமிழ்நாட்டு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றார்.
இந்நிலையில், பொங்கலன்று அமித் ஷா சென்னை வர இருப்பதாகவும், அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசக்கூடும் என்றும், ரஜினியை சந்திப்பார் என்றும் தகவல்கள் பரவியிருந்தன.
இந்தச்சூழலில், அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
ஜனவரி 14ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை பிறப்பிப்பு.
இந்தியா
4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை மார்ச் 1 ஆம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு: ஏலத்தில் பங்கேற்க விரும்பும் டெலிகாம் ஆபரேட்டர்கள் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் – மத்திய அரசு.
இந்தியா-பிரான்ஸ் இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில், இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்குகிறார்.
உலகம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது
ஜோன் பைடன் வெற்றிக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் டிரம்ப் தொடர்ந்து கருத்து வெளியிட்டுவந்தார். இதனையடுத்து, அவரின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கை, உடனடியாக டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. மேலும், விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.