Fri. Nov 22nd, 2024

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி எஸ்.முருகன், முதலமைச்சர் மு க ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்..

திமுக தலைமைக் கழக அலுவலகச் செயலாளராக பணியாற்றி வருபவர் பூச்சி முருகன்.. பரம்பரை திமுக குடும்பத்தைச் சேர்ந்த இவர், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி காலத்தில் இருந்து நம்பிக்கைக்கு உரியவராக பணியாற்றி வருபவர்.. திரையுலகிலும் செல்வாக்கு மிக்கவராக திகழும் பூச்சி முருகன் மீது மிகுந்த பரிவு காட்டி வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின், அவரின் விசுவாசத்திற்கு மரியாதை வழங்கும் விதமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.. நேற்றைய தினம் அவரது புதல்வியின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திய முதல்வர் மு. க. ஸ்டாலின், நேற்று முன்தினம் பூச்சி முருகனையும் அவரது குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக வாரியத் தலைவர் பதவியை வழங்கி கெளரவித்துள்ளதாக திமுக மூத்த நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..