Sat. Nov 23rd, 2024

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஐஜிக்களாக 14 பேருக்கும் டிஐஜி-க்களாக 3 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டும், 13 பேர்களுக்கு பணியிடமாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமனம்.

நெல்லை சரக டிஐ.ஜிஆக பிரவேஷ்குமார் நியமனம்.

சேலம் சரக டிஐஜி ஆக பிரவீன் குமார் நியமனம்.

திண்டுக்கல் சரக டிஐஜி., ஆக ரூபேஷ்குமார் மீனா நியமனம்.

வேலூர் சரக டிஐஜி., ஆக ஆனி விஜயா நியமனம்.

தஞ்சை சரக டிஐஜி., ஆக கயல்விழி நியமனம்.

பாபு ஐ.ஜி. ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக நியமனம்.

சமூகநீதி மற்றும் மனித உரிமை காவல் துறை ஐஜியாக செந்தாமரைக்கண்ணன் நியமனம்.

துரைகுமார் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமனம்.

ஆசியம்மாள் ஐஜிஆக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐஜி ஆக நியமனம்.

சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில் குமார் நியமனம்.

பொன்னி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று மதுரை காவல் ஆணையராக நியமனம்.

மகேஸ்வரி ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று தொழில் நுட்ப ஐஜிஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கப்பிரிவு ஐஜியாக விஜயகுமாரி நியமனம்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி ஆக லலிதாலட்சுமி நியமனம்.