Sat. Nov 23rd, 2024

அரசியலில் குதிக்கிறாரா? மக்கள் பாதை அமைப்பு அழைப்பு

அரசியலில் நேர்மை, எளிமை, தூய்மை எனும் அம்சங்களுடன் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு தலை வணங்காமல் துணிச்சலாக அறத்துடன் மட்டுமே பணியாற்றி வந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பதவி ஏற்றார். பணியில் அவரின் 30 ஆண்டு காலத்திற்கு மேலான பணியில், அதற்கு மேலாகவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருந்தபோதும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்த்து என்ற கொள்கைப் பிடிப்போடு தனக்கு வழங்கப்பட்ட துறைகளில் 100 சதவிகிதம் நேர்மையோடு பணியாற்றி வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ். நாளுக்கு நாள் தமிழக அரசியலும், அரசு நிர்வாகமும் சீர்கெட்டு போனதால், அரசுப் பதவியில் தொடர அவர் விரும்பவில்லை. அரசு நிர்வாகத்தின் மீதும், ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மீதும் மிகுந்த மனம் வருத்தமடைந்த அவர், விருப்ப ஓய்வு கோரி, கடந்த அக்டோபா் 2-ஆம் தேதியன்று விருப்ப ஓய்வு கோரி அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா். . இந்நிலையில், அரசுப் பணியிலிருந்து உ.சகாயம் ஐ.ஏ.எஸ் புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக அவா் பதவி வகித்துவந்தார்.