Sun. Nov 24th, 2024

ஊத்தி கொடுப்பது தொடர்பாக தெரிவித்த கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் இருப்பினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவிித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…

நான் சொன்ன வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. டிடிவி.தினகரனின் குடும்ப தொழில் என்ற அர்த்தத்தில் தான் ஊத்தி கொடுப்பது குலத் தொழில் என்று நான் சொன்னேன். அதை ஏதோ ஒரு சமுதாயத்திற்கு எதிராக நான் கருத்து சொன்னதாக பரவி வருகிறது. அப்படி நான் சொன்ன கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்..

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

முன்னதாக டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் இடையேயான வார்த்தை போரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக அமைச்சருக்கு எதிராக சர்ச்சை எழுந்தது..

அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால்,

தமிழகம் முழுவதிலும் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் டாக்டர்.கணேசன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.