பவானியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை.
கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.
அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கை.
ஒருதாய் வயிற்றில் பிறந்த அண்ணணுக்கே தூரோகம் இழைக்கும் ஸ்டாலின்,
மக்களை எவ்வாறு பாதுகாப்பார்? – முதலமைச்சர் கேள்விதுண்டு சீட்டு இல்லாமல், கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம் – முதலமைச்சர் பழனிசாமி.
கல்லக்குடி இரயில் நிலையத்தில் பொதுமக்களுடன் உரையாடிய பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம்.
பாஜக தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக மக்கள் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டார்கள் –
அமைச்சருக்கு கொரோனோ: உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-க்கு கொரோனா தொற்று பாதிப்பு –
மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி.
திமுக 2 ஆம் கட்ட கிராம சபை கூட்டங்கள்
ஸ்டாலின் பங்கேற்கும் இரண்டாம் கட்ட மக்கள் கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜன. 7 ஆம் தேதி (புதன்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் அன்பழகனின் தொகுதியான பாலக்கோட்டில் கூட்டம் தொடங்குகிறது.
பின்னர் மாலை, முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் கூட்டம் நடைபெறுகிறது.
8 ஆம் தேதி காலை அமைச்சர் தங்கமணியின் குமார பாளையம் தொகுதியிலும், மாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
9 ஆம் தேதியன்று அமைச்சர் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியிலும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் போடி தொகுதியிலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
நிறைவாக 10 ஆம் தேதியன்று அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியான சென்னை ராயபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
நடராஜனுக்கு இடமில்லை :ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு:
காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக சேர்ப்பு, தமிழக வீரர் நடராஜன் இடம் பெற வில்லை.
ரஹானே தலைமையிலான இந்திய அணியில் ரோகித், கில், புஜாரா, விஹாரி, ரிசப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வானிலை நிலவரம் :அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்.
தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., தாம்பரம் தலா 16 செ.மீ. மழை பதிவு.
ஆன்மிகம்
சபரிமலை முன்பதிவு :சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்
வரும் 8 முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
100 % ஆபத்து: திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.மருத்துவ நிபுணர்கள் குழு 100% இருக்கைகளுக்கு பரிந்துரைக்கவில்லை.
இதனை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என
மருத்துவ நிபுணர் குழு மருத்துவர் குகாநந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.