Sat. Nov 23rd, 2024

சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரண்டு இடங்களை பிரித்து, அந்த பகுதிகளை தலைமையிடமாக கொண்டு புதிய காவல்துறை ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரண்டு நகராட்சிகளையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு மாநகராட்சிகளிலும் புதியதாக காவல்துறை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள தமிழக அரசு, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள எம்.ரவி ஐபிஸை சிறப்பு அதிகாரியாகயும், ஆவடி மாநகர காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்.ஸையும் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பிரிக்கப்பட்டு தாம்பரம்- ஆவடி மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பணி துவங்கி உள்ளது.. அந்த வகையில் எந்தெந்த பகுதிகள் எந்த மாநகர காவல்துறை எல்லைக்குள் வரும் என ஆதாரபூர்வமற்ற வகையில் கிடைத்துள்ள உத்தேசப்பட்டியல்

1.திருவல்லிக்கேணி, 2.கீழ்பாக்கம், 3. மயிலாப்பூர், 4. புளியந்தோப்பு, 5.பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும் ,

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் வரும் பகுதிகள் ( உத்தேசப்பட்டியல்)

  1. தாம்பரம், 2. மவுண்ட், 3. அடையாறு, 4. பூந்தமல்லி, 5.தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும்,

ஆவடி ஆணையரகத்தின் கீழ் வரும் பகுதிகள் (உத்தேசப்பட்டியல்)

1.அண்ணாநகர், 2.அம்பத்தூர், 3. மாதவரம், 4.வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும்.

சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்…..