Mon. Nov 25th, 2024

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 3-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை துவங்கியது:

தமிழகம் முழுவதும் 20,000 முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் களத்தில் முனைப்புடன் பணியாற்றினர்..

திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறினார். .

28 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கும், 2-ம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இன்று 3-ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் நாளை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாலை 5 மணி நிலவரத்தை சுட்டிக்காட்டி சுகாதாரத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.