முதல்நாள் ஆளுநர் உரையாற்றுகிறார்…
ஜன. 5 முக்கியச் செய்திகள்
தமிழகம்
ஜனவரி 29-ல் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன்தொடங்குகிறது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு:
இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்.
மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை என கருத்து.
வழக்கு விசாரணை முடியும் வரை மினிகிளினுக்குகளுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில்
தற்போதைய நிலை தொடர வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தமிழக அரசு பதிலளிக்க 15 நாள் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களில் அரசியல் தலைவர்கள் படங்கள் அச்சிடக் கூடாது என்ற உத்தரவை மீறி
பேனர்கள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு; வழக்கு தொடர அனுமதி கோரி
தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
அரசு தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து வழக்கு தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு அனுமதி.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரிப்பு
பூண்டி ஏரியில் 2,970 கனஅடி நீர் வெளியேற்றம்.
செங்குன்றம் நீர்த்தேக்கத்தில் இருந்து 1500 கனஅடி நீர் வெளியேற்றம்.
மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசடி வழக்கில் கைது.
மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி புகாரில் அதிரடி.
தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை.
வானிலை நிலவரம் சென்னையில் ஜனவரியில் மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை தரமணியில் நள்ளிரவு முதல் தற்போது வரை 17 செ.மீக்கும் மேல் மழை பெய்துள்ளது என்றும் தகவல்
இந்தியா
கொச்சி – மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 450 கி.மீ தொலைவிற்கு
கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை இத்திட்டம் இணைக்கிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 29ம் தேதி தொடங்குகிறது: நாடாளுமன்ற விவகாரத்துறை
ஜன.29 முதல் பிப்.15 வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 2ம் அமர்வும் நடத்தப்படும் என அறிவிப்பு.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆலோசிக்க வாய்ப்பு.