Sat. Nov 23rd, 2024

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜிக்காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி பத்திரிக்கை நிருபர்களிடம் பேட்டிஅனைத்து சாதி அர்ச்சகர் ஆகியது சமூகநீதி ஆகும் இதில் எந்த தவறும் இல்லை

தமிழக நிதி அமைச்சர் நிதி அறிக்கையில் மிகத் தெளிவாக கூறியுள்ளார் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய உரிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை

கொட நாட்டில் நடந்த கொலை வழக்கு பிரச்சனையை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி சட்டப்படி எதிர் கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் பெட்ரோல் மீதான வரியை திமுக அரசு குறைந்துள்ளது. ஆனால், வலிமையான பிரதமர் என்று கூறிக் கொள்ளும் மோடி, பெட்ரோல், மீதான டீசல் வரியை குறைக்காமல் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.

ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு தருவதாக ஒப்புக் கொண்ட உரிய பங்கிற்கான தொகையை கூட வழங்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்து இருப்பதை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை நிதியை வழங்கியிருந்தால் கூட மாநில அரசின் பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் அதைக்கூட செய்யாமல் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

இதேபோல், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.