Sat. Nov 23rd, 2024

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசினார்.

முன்னதாக போராட்டத்திற்கு ட்ராக்டரில் ஊர்வலமாக பிரேமலதா:வந்ததை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில், பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் பேசிய பிரேமலதா, தமிழ்நாடு ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது; மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். 

தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும்.

இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

தமிழ்நாடு மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திரபோசாக இருக்க வேண்டுமா என கர்நாடகா அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறோம். பெங்களூர் நுழைவு வாயிலான ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம், பெரும்படை திரட்டி பெங்களூக்குள் எங்களாலும் நுழைய முடியும்,

இருமாநில மக்களுக்கு இடையே பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன்.

கர்நாடக தமிழக மக்கள் இடையே பிரிவினை இல்லை; ஆகவே தண்ணீரிலும் பிரிவினை வேண்டாம்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம்.

மத்தியிலும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி கர்நாடக அரசிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்தை கை விட துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா ஆவேசமாக பேசினார்.