Sat. Nov 23rd, 2024

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான சேவைத் திட்டத்தை துவக்கி வைத்தார். நோயாளிகள் வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நோயாளிகளிடம் உடல்நலம் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்து விசாரித்து அறிந்தார்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை காணொளி மூலம் துவக்கி வைத்த முதல்வர், மருத்துவ சேவைக்கான ஊர்திகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்களை தேடி மருத்துவம் சேவை திட்டத்திற்கு முதற்கட்டமாக 1346 சுகாதார அலுவலர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார்.