காவல் சீருடையில் காவல் துணை கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) மகள்
மலர்ந்த் முகத்துடன் சல்யூட் அடித்து வரவேற்ற இன்ஸ்பெக்டர் தந்தை…
…..
ஆந்திரா மாநில காவல்துறையில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை காவல் கண்காணிப்பாரளாக (போலீஸ் டெபுடி சூப்பிரண்டாக) பணியாற்றி வருகிறார். காவல் துறை பணியில் மகள் உயரதிகாரி..வீட்டில் தந்தை மகளாக இருந்தாலும், பணியின் போது மகளின் உத்தரவுக்கு தந்தை பணிந்துதான் ஆக வேண்டும். அதைவிட முக்கியம், மகள் வரும் போது தந்தை எழுந்து நின்று சல்யூட் அடித்து மரியாதை தர வேண்டும். ஆனால், அதுபோன்ற நிகழ்வு, இருவருக்கும் நிகழாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அண்மையில் திருப்பதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி கலந்துகொள்ள வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த அவரது தந்தையான இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், காவல் துறை மரபுப்படி டி.எஸ்.பி. ஜெஸ்ஸி பிரசாந்திக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்…
எனும் குறளுக்கு ஏற்ப, மகள், தந்தை முகங்களில் ஏற்பட்ட பூரிப்புக்கு, இருவருக்கும் இடையேயான பேரன்பைப் தவிர வேறு என்னவாக உணர்ச்சி கொந்தளித்துவிட முடியும்..
இருவரிடமும் பரவிய அந்தப் பாசப் பூக்கள், அங்கிருந்த பார்வையாளர்களையும் தொற்றிக் கொண்டதை சொல்லவும் வேண்டுமா, என்ன?
திருக்குறளில் இந்த மூன்று குறளும், ஒவ்வொரு பெற்றோருக்கும், அவர்தம் வாரிசுகளுக்கும் சொல்லும் பாடங்களும், வழிகாட்டுதல்களும், வேறு எந்த வார்த்தைகளில், எந்த மொழிகளில் சொல்லி விட முடியும்..
பொழிப்புரை (மு வரதராசன்): அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்….
(பொருள்: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
என்நோற்றான் கொல்.)
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்….
(பொழிப்புரை : (மு வரதராசன்): மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..)