Sat. Apr 19th, 2025

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபையில் தைப் பூசக் கொடியேற்றத்துடன் இன்று காலை கோலகலமாக தொடங்கியது

வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். இதனையொட்டி, இந்தாண்டிற்கான தைப் பூச கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. சன்மார்க்க கொடி ஏற்ற வைபவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தைப்பூச தினமான நாளை அதிகாலை முதல் மாலை வரை (28ம் தேதி,) ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதனைக் காண, இன்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடலூரில் குவியவுள்ளனர்.

தொடர்ந்து, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 30ம் தேதி மதியம், 12:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, திருஅறை தரிசனம் நடைபெறும் என்று சத்திய ஞான சபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.