Sun. Apr 20th, 2025

பொது வெளியில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே முன்வைக்கப்படுவது உண்டு. அந்த கறையை வாழ்நாள் முழுவதும் அனைத்து ஊடகவியலாளர்களும் சுமந்து கொண்டிருக்கும் நிலை உருவாகியிருப்பதுதான் சாபக்கேடு…

கை நீட்டி வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் ஊடகவியலாளர்கள். ஒருபோதும் அவர்களிடம் இருந்து பணம் நன்கொடையாக எந்தவொரு பேரிடர் காலத்திலும் தர்மக் காரியத்திற்கும் நன்கொடையாக பணம் வழங்கப்பட்டதில்லை என்று சமூக ஊடகங்களில் புழுதி வாரி தூற்றப்பட்ட நிகழ்வகள் நிறைய உண்டு.

அவர்கள் எல்லோரும் பூதக் கண்ணாடியை வைத்து தேடிப் பார்த்தால்கூட, ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அமைப்புகள் ரீதியாகவும் செய்து வரும் நற்பணிகளும், நலத்திட்ட உதவிகளும் அவர்களின் கண்களுக்கு புலப்படாது.

அப்படிபட்டவர்களின் நெற்றிப் பொட்டில் அடிப்பதைப் போல, திருச்சி பிரஸ் கிளப், இன்றைக்கு மாபெரும் ஒரு செயலை செய்து இருக்கிறது. ஊடகப் பணியையே முழுநேர தொழிலாக கொண்டு, 8 மணிநேரமும், அதற்கு மேலாகவும் உழைக்கும் ஊடகவியலாளர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள திருச்சி பிரஸ் கிளப் சார்பில் கொரோனோ எனும் பேரிடரை எதிர்கொள்ள போராடி வரும் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் நேரில் வழங்கியுள்ளனர்.

நன்றி மறப்பது நன்றன்று என்ற அடிப்படையிலும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனோ நிதியாக ரூ. 5000 வழங்க உத்தரவு பிறப்பித்தற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள், திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகள்…

மகத்தான சேவை புரிந்தமைக்காக திருச்சி பிரஸ் கிளப் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் நல்லரசு தமிழ் செய்திகள் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது….