Sun. May 4th, 2025


ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இன்று காலை அலுவலகம் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காலை 9.30 மணியளவில் முகமூடி அணிந்த 5 பேர், அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை மிரட்டியும், தாக்கியும் கட்டிப்போட்டனர்.

பின்னர் ரகசிய அறைகளில் இருந்த லாக்கரை உடைத்து சுமார் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். மேலும், 90 ஆயிரம் ரூபாயையும் சுருட்டியவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ. 7 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பான சாலையில் உள்ள நிறுவனம் ஒன்றில் காலை நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வு, ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த ஓசூர் காவல்துறையினர், கொள்ளை நிகழ்வு குறத்து ஆயவு மேற்கொண்டதுடன், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.