ஆந்திராவில் வீடு தேடி போய் ரேஷன் பொருள் வழங்கற திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை தொடங்கி வைத்திருக்கிறார். இதுமாதிரியான திட்டத்தை தான் பல ஆண்டுகளுக்கு முன்பு, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். அதற்கு மேலாக, தேர்தல் பிரசாரத்திற்காக ஊர், ஊராக சென்ற போதும் அவர், தான் முதல்வராக வந்தால், வீடு தேடி ரேஷன் பொருள் வரும் என்றும் சூளுரைத்தார். ஆனால், அப்போது அவர் பேச்சை, ஆளும்கட்சியாக இருந்தவர்களும் கிண்டல் அடித்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்தவர்களும் கேலி செய்தார்கள். ஆனால், இன்றைக்கு அந்த திட்டம் , ஆந்திராவில் நனவாகி இருக்கிறது.
வாசல் தோறும் வரும் ரேஷன் கடை வாகனங்கள், ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருள்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது ஜெகன் மோகன் ரெட்டி அரசு என்கிறார்கள் ஆந்திர ஊடகவியலாளர்கள். வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்குவதற்காக 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தமிழகம் மாதிரி பேருக்கு அரிசி, பருப்பு கொடுக்காமல், தரமான அரசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருள்களை வழங்க உத்தரவிட்டிருக்கிறாராம் ஜெகன்மோகன் ரெட்டி.
நினைச்சதை சாதிக்கிறார் எங்கள் மாநில முதல்வர் என்கிறார்கள் ஆந்திராவைச் சேர்ந்த மக்கள்.
தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஏற்கெனவே, கொரோனோ காலத்தில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட்ட அனுபவம் நமது ரேஷன் கடை ஊழியர்களுக்கு இருக்கிறது. கொஞ்சம் மெனக் கெட்டால், வீடு தேடி ரேஷன் பொருள்களை எளிதாக வழங்க முடியும் என்கிறார்கள், பொது விநியோகத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற அதிகாரிகள்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்த இந்த திட்டம் பற்றி தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ஹைதராபாத் பதிப்பில் செய்தி வெளியாகி இருக்கிறது.
Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy flagged off ‘Mobile Dispensing Units’ (door delivery vehicles) in Vijayawada on January 21. As many as 9,260 vehicles will supply the ration, including quality rice, at the door steps of ration cardholders in the State.